Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

ஸ்ரீலங்கன் விமான சேவை பிரச்சினை : ஜேர்மனிய பிரஜைக்கு நாட்டில் இருந்து வெளியேற தடை

Posted On : March 20, 2017

ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் தொடர்புடைய சம்பவம் காரணமாக பாகிஸ்தான் விமான சேவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரை நாட்டில் இருந்து வெளியேற அந்நாடு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜேர்மனிய பிரஜை பர்ன் ஹில்டன் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சமஷ்டி விசாரணை முகவர் அமைப்பின் பணிப்பாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் பர்ன் ஹில்டன் பாகிஸ்தானில் இருந்து வெளியேற முடியாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்திற்கும் இடையில் வாடகை அடிப்படையில் விமானங்களை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கையை இரத்துச் செய்தமை சம்பந்தமாக பாகிஸ்தான் சமஷ்டி விசாரணை முகவர் அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஜேர்மன் பிரஜையான நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் பாகிஸ்தான் விமான சேவை அதிகாரிகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் மோசடி, முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்