Home / உலகம் / ஐரோப்பா /

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் அறிவியலில் சரிவை சந்திக்கும்-ஸ்டீபன் ஹாக்கிங்

Posted On : March 21, 2017

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு போன்றவைகளில் சரிவை சந்திக்க நேரிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார். இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண் வெளியில் பறக்க திட்ட மிட்டுள்ளார்.

லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75). இவர் விண்வெளியில் பறக்க உள்ளார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர்.

இவர்களில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் இடம் பெற்றுள்ளார். இத்தகவலை ஐ.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதை அவர் தெரிவித்தார்.

 ‘இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நினைக்க வில்லை. என்னை விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற எனது ஆசையை தீர்த்து வைப்பவர் யார் என்ற தவிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. ஆய்வில் வெர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்’.

தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவர்களிடம் தான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். இருப்பினும் விண்வெளிக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தான் நினைத்து கூட பார்த்ததில்லை.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து சரிவர தெரியவில்லை. அப்படி இங்கிலாந்து வெளியேறினால் உலகத்தை விட்டே வெளியேறிவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.

நாம் ஐரோப்பா மற்றும் உலகின் பிறபகுதிகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு போன்றவைகளில் சரிவை சந்திக்க நேரிடும் இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்