Home / உலகம் / ஐரோப்பா /

ஊழல் குற்றச்சாட்டு: பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பதவி விலகினார்

Posted On : March 22, 2017

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனோ லீ ருக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் வர்த்தக அமைச்சர் மத்தியாஸ் ஃபெக் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது மகள்மாருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து அவர்களுக்கான கொடுப்பனவை அரச பொது நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்ததாக புருனோ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்தே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதவி விலகியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அவர், இவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பொது நிதியை தனது குடும்பத்தாரின் தேவைக்கு பயன்படுத்தியதாக பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபிலோன் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து அரசியல்வாதிகள், தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமனங்களை பெற்றுக் கொடுப்பதானது தற்போது பிரான்ஸில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்