Home / உலகம் / ஐரோப்பா /

ஓராண்டு அஞ்சலி: கண்ணீரில் மூழ்கிய பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம்

Posted On : March 22, 2017

பதினாறு பேரை காவுகொண்ட பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

விமான நிலைய ஊழியர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த ஆண்டு பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஒரே தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 32 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்