Home / உலகம் / ஐரோப்பா /

கிரைமியாவில் ரஷ்யாவின் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி

Posted On : March 22, 2017

உக்ரைனிடமிருந்து பிரித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியா குடாநாட்டில் பாரியளவிலான தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியினை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

ஓபுக் கிரைமிய பயிற்சி வரம்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பயற்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய துணைப் படையினர் கலந்துக் கொண்டிருந்தனர்.

தமது பிராந்தியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்த நிலையிலேயே இவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தூண்டப்பட்டதாக குறித்த பயிற்சிக்கு பொறுப்பான தளபதி கேர்னல் ஜெனரல் ஆண்ட்ரி செர்டியுகோவ் தெரிவித்தார்.

இதன்போது, நீரிலும், நிலத்திலும் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான பயிற்சிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு கிரைமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதன் பின்னர், அப்பகுதியில் பல அறிவிக்கப்படாத ராணுவ பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்