Home / உலகம் / ஐரோப்பா /

குடியேற்றவாசிகள் பிரச்சினை மிக மோசமான துயரச் சம்பவமாகும்: பாப்பரசர்

Posted On : March 22, 2017

உலகளாவிய ரீதியில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான துயரச் சம்பவமாக, அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் பிரச்சினை காணப்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த பிராத்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே பாப்பரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த பாப்பரசர், “2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 1.3 கோடிக்கும் அதிகமான குடியேற்றவாசிகளும், அகதிகளும் ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளினால் நாடுகடத்தப்பட்ட, தஞ்சம் புகுந்த, புலம்பெயர்ந்த, ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது எமது தார்மீக பொறுப்பாகும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments

தொடர்புடைய செய்திகள்