Home / உலகம் / ஐரோப்பா /

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து ட்ரம்பிடம் வலியுறுத்தவுள்ளது இத்தாலி

Posted On : March 22, 2017

இத்தாலியில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட ஏனைய உலக நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தவுள்ளதாக இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார்.

ரோமில் இடம்பெற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே- உடனான சந்திப்பை தொடர்ந்து இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவது தொடர்பிலும் ஜி-7 மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டிற்கான ஜி-7 மாநாடு இம்முறை இத்தாலியில் எதிர்வரும் மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் ட்ரம்ப் கலந்துக்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ட்ரம்பின் ஐரோப்பாவிற்கான முதல் விஜயமாக இது அமையவுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்