Home / உலகம் / சுவிஸ் /

ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Posted On : March 22, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் 10 வயதான சிறுவன் ஒருவன் Kappeli ட்ராம் நிலையத்திற்கு சென்றுள்ளான்.

அப்போது, 14 வழித்தடத்திற்கு செல்வதற்காக ட்ராம் இருப்புச் சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ட்ராம் வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது. இதில் சிறுவன் ட்ராம் சக்கரம் இருந்த இடத்தில் சிக்கிக்கொண்டான்.

சில மீற்றர்கள் தூரம் வரை சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டான். இச்சம்பவம் அறிந்த உடனே ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் அங்கு விரைந்து வந்துள்ளனர். சிறுவனின் உடல் முழுவதும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

எனினும், சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால் சிறுவன் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ட்ராம் வாகன விபத்துக் காரணமாக 14 வழித்தடத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்