Home / உலகம் / ஐரோப்பா /

மறைந்த முன்னாள் துணை முதல்வருக்கு வட அயர்லாந்து பிரதிநிதிகள் சபையில் அஞ்சலி

Posted On : March 22, 2017

மறைந்த வட அயர்லாந்தின் முன்னாள் துணை முதல் அமைச்சர் மார்டின் மேக்கின்னஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வட அயர்லாந்து பிரதிநிதிகள் சபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது.

ஐரிஷ் குடியரசின் ராணுவத் தளபதியாகவும், மூன்று தசாப்த போரை முடிவுக்கு கொண்டுவந்த சமாதான தூதுவருமான மார்டினுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் ஒன்றுகூடுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் துணை முதல் அமைச்சர் மார்டின் மேக்கின்னஸ், சிகிச்சை பலனின்றி நேற்று தனது 66ஆவது வயதில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் நாளை அவரது சொந்த ஊரான டெர்ரியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மார்டின் மேக்கின்னஸின் மறைவை முன்னிட்டு டப்லினில் உள்ள ஐரிஷ் நாடாளுமன்றத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்