Home / உலகம் / ஐரோப்பா /

குடியேற்றவாசிகள் நெருக்கடியை சமாளிக்க லிபியாவிற்கு உதவும் சுவிட்சர்லாந்து அமைப்பு

Posted On : March 23, 2017

வட. ஆபிரிக்காவில் குடியேற்றவாசிகளின் நிலைமையை மேம்படுத்த லிபிய அரசாங்கத்திற்கு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குடியேற்ற அமைப்பு உதவ வேண்டும் என அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வில்லியம் லேசி ஸ்விங் தெரிவித்துள்ளார்.

லிபிய தலைநகர் திரிப்போலியிலுள்ள வெளிவிவகார அலுவல்கள் அமைச்சின் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற லிபிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

லிபியாவில் சனநெரிசல் மிகுந்த குடியேற்றவாசிகளின் முகாம்களை பார்வையிட்ட அவர், அங்குள்ள மக்களின் நிலைமைகளை கையாள தமது அமைப்பு நிச்சயம் உதவும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக லிபியாவில் தொடர்ந்துவரும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்