Home / உலகம் / ஐரோப்பா /

பிரித்தானிய தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்: ஜேர்மன் அமைச்சர்

Posted On : March 23, 2017

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் சாதாரணமானதல்ல. அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

கிரேக்கத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் அமைச்சருக்கும், கிரேக்க பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் அறிந்து தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நால்வரின் உயிரை காவுகொண்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக கிரேக்க பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவிற்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்