Home / உலகம் / அவுஸ்ரேலியா /

இலங்கை இராணுவ அதிகாரியின் வீசா மறுக்கப்பட்டதற்கு இது தான் காரணம்! அவுஸ்திரேலியா

Posted On : March 24, 2017

இலங்கை இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கல்லகே, கடந்த 2016 செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியா செல்வதற்கு வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் என்று நன்கு தகவல் அறிந்த வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

2016 டிசெம்பர் தொடக்கம், 2017 ஜனவரி வரையான காலத்தை, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரருடன் செலவிடுவதற்காகவே அவர் நுழைவிசைவு கோரியிருந்தார்.

எனினும், இவருடன் நேர்காணலை நடத்திய பின்னர். அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம், “சர்ச்சைகளுக்குச் சாத்தியமான விருந்தினர்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததை அடுத்தே, கல்லகேயின் வீசா மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசாவிண்ணப்பத்தை அவுஸ்திரேலியா நிராகரித்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று அவுஸ்திரேலிய தூதரகத்திடம் எழுப்பிய கேள்விக்கு, ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தவொரு இலங்கை இராணுவ அதிகாரிக்கும் வீசா மறுக்கப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பம் இன்னமும் பரிசீலவனையில் இருப்பதாக அவுஸ்திரேலிய தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பாகவோ அல்லது வேறெந்த இலங்கை இராணுவ அதிகாரிகளின் வீசா விவகாரங்கள் தொடர்பாகவோ, மேலதிக கருத்துக்கள் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் மேயர் ஜெனரல் சாஜி கல்லகே போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்