Home / உலகம் / பிரான்ஸ் /

புதிய வசதிகளுடன் இரவு நேர பேரூந்து! – இல்-து-பிரான்சுக்குள் நடைமுறை!

Posted On : March 24, 2017
இல்-து-பிரான்சுக்குள் சேவையில் இருக்கும் இரவு நேர பேரூந்துகள் தரிப்பிடங்கள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் இரவு நேர பேருந்துகள் இதுவரை காலமும் அதற்குரிய தரிப்பிடங்களிலேயே நிற்கும் படியாக இருந்தது. இச்சேவைகளை பயணிகளுக்கான தேவைகள் கருதி தரிப்பிடங்கள் இல்லாத பகுதிகளில் நிறுத்துவதற்கான தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இல்-து-பிரான்ஸ் போக்குவரத்து துறை (Stif) சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே செயற்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்