மொபைலில் எடுக்கப்பட்டு கவனம் ஈர்த்த 4 அசத்தல் திரைப்படங்கள்!
டிஜிட்டல் வளர்ச்சிக்குப் பிறகு மொபைல் கேமராவைக் கொண்டே சினிமாக்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் பெரும்பாலானவை குறும்படங்கள் என்றாலும், மொபைலில் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படங்களும் இருக்கின்றன. அதில் சில…
2015-ல் வெளியான திரைப்படம். சீன் பார்க்கர் என்பவரது இயக்கத்தில் உருவான இதில், சிறையில் இருந்து திரும்பும் திருநங்கை ஒருவர், தோழியும் சக திருநங்கையுமான ஒருவருடன் இணைந்து தனது காதலனைத் தேடிச்செல்வதைத் திரைக்கதை ஆக்கியிருக்கிறார். காமெடிப் படமான இது, அழகான அமெரிக்காவின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது. திருநங்கையான கிடானா கிகி என்பவர் இப்படத்தின் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார். 87 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் முழுக்க மொபைலில் எடுக்கப்பட்டது. ‘எ ரிவென்ச் ஆஃப் டிரான்ஸ்ஜென்டர்’ என்ற கலக்கலான கேப்ஷனுடன் வெளியான இப்படம், சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.