Home / உலகம் / ஜேர்மனி /

தவறுதலாக ரூ.82 ஆயிரம் கோடி பணத்தை அனுப்பிய அரசு வங்கி: நிகழ்ந்த விபரீதம்

Posted On : March 25, 2017

ஜேர்மனி நாட்டில் அரசு வங்கி ஒன்று தவறுதலாக மற்ற வங்கிகளுக்கு சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் நாட்டின் மத்திய அரசு கட்டுப்பாட்டில் Kreditanstalt fur Wiederaufbau(KfW) என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் இந்த அரசு வங்கியில் இருந்து சுமார் 5 பில்லியன் யூரோ(8,20,07,31,00,000 இலங்கை ரூபாய்) பணம் திடீரென மாயமாகியுள்ளது.

வங்கியில் உள்ள கணிணிகளில் சோதனை செய்தபோது நிதியை தாணாக அனுப்பும் சொல சொப்ட்வேர்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், இந்த அரசு வங்கியில் இருந்து 4 பிற வங்கிகளுக்கு அந்த காணாமல் போன தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக அரசாங்கத்திற்கும் வங்கி மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் தயாரிக்கப்பட்ட அந்த மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இந்த தவறுக்கு காரணம் எனத் தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக பிற வங்கிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்