Home / சினிமா / திரைவிமர்சனம் /

வைகை எக்ஸ்பிரஸ் படம் எப்படி இருக்கு ? விமர்சனம்

Posted On : March 25, 2017

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் , மக்கள் பாசறை தயாரிப்பில் தமன் இசையில் க்ரைம்,த்ரில், ஆக்ஷன் படமாக வந்திருக்கும் “வைகை எக்ஸ்பிரஸ் ” படத்தில் ஆர்.கே, நீது சந்திரா, இனியா , கோமல் சர்மா, சுஜா வாரூணி, நாசர், சுமன், மதன்பாப், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்ஸ் பவன் ,சிங்கமுத்து , கார்மேகம் ,மனோபாலா உள்ளிட்ட  நடிகர் பட்டாளம் நடித்துள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் “வைகை எக்ஸ்பிரஸ் ” சிறப்பு இரவு ரயிலின் குளிர் சாதன வசதியுடைய பெட்டியில் பயணம் செய்யும் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா , தனியார் தொலைக்காட்சி நிருபர் கோமல் சர்மா , தமிழக எம்.பி சுமனின் மைத்துனி என மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் ரயிலில் இறக்கின்றனர்.

உடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது தெரியவருகிறது.பயணிகள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.அந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் ரயிலிலேயே இறக்கின்றனர், நீது சந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சாதாரண கொலை என்பதால் சம்பந்தப்பட்ட ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாசர் இதனை விசாரித்து வருகிறார்.

கொலைக்கான காரணம் மற்றும்  துப்பு  ஏதும் கிடைக்கமால் இருப்பதால் வழக்கு அப்படியே நிற்கிறது.கொலை பற்றி விசாரிக்க எம்.பி. சுமன் ரேக் என்னும் ரயில்வே சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரி ஆர்.கே.வை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கிறார். அன்று பயணம் செய்த பயணிகள் பட்டியலில் உள்ள நபர்களை விசாரிக்கும் போது ரயில் பயணம் செய்த தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்பட்டு அவரை கைது செய்கிறார். ஆர்.கே,

கொலைகளை தான் செய்யவில்லை என செல்வமணி உறுதிப்பட கூறியதை அடுத்து ஏசி பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் மீது தனது வழக்கமான சந்தேக பார்வையை ஆர்.கே. செலுத்துகிறார்.பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் போது  சறுக்கல் மட்டும் தடங்கல் ஏற்பட்டாலும், தனது விசாரணையில் கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் அடுத்தடுத்து அவர்க்கு  கிடைக்கிறது.

3 பெண்களை கொலை செய்த குற்றவாளி யார்? மூன்று கொலைகளையும் செய்ய காரணம் என்ன ? கொலைக்கு ரயிலை தேர்வு செய்த காரணம்?
போலிஸ்க்கு தடயம் இல்லாமல் விட்டு சென்றது எப்படி? இவனா கொலையாளி என பல கேள்விகளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பதில் கிடைக்கிறது.

ரயில் கொலைகள் மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணை, விசாரணையில் ஏற்படும் பரபர திருப்பங்கள் எல்லாம் ஆரம்பம் தொட்டே  “வைகை எக்ஸ்பிரஸ் ” படத்தை வேகமாகவும் , விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறது.

ஒரு சட்டசபையையே சட்ட பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு, சுத்தினவங்க எல்லாம் கூட சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது ஆர்.கே பஞ்ச் டயலாக் ரசிகர்களின் கைதட்டல்களை பெறுகிறது. ஆர்.கே.வின் டயலாக் மாடுலேஷன் மற்றும் ஆங்கில உச்சரிப்பு இரண்டும் படத்திற்கு கைகொடுக்கவில்லை, மொத்தத்தில் வைகை எக்ஸ்பிரஸ் அனைவரையும் கவரும் லோக்கல் எக்ஸ்பிரஸ்…

Comments

தொடர்புடைய செய்திகள்