Home / உலகம் / ஐரோப்பா /

ஐரோப்பிய மக்கள் கட்சி மாநாடு: சக்திவாய்ந்த அரசியல் குடும்பத் தலைவர்கள் பங்கேற்பு

Posted On : March 30, 2017

மோல்டாவில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகிய ஐரோப்பிய மக்கள் கட்சியின் மாநாட்டில் ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள வருடாந்த மாநாட்டில், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகளை பிரித்தானியா ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பில் இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முதல் நாளான இன்று ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்