Home / உலகம் / ஜேர்மனி /

நடுவானில் உடல்நலக்குறைவு- 195 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது எப்படி?

Posted On : March 30, 2017

ஜேர்மனியிலிருந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் துணை விமானிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் பணிப்பெண்கள் உதவியுடன் விமானி விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

ஜேர்மனியின் Hannoverவிலிருந்து ஸ்பெயினுக்கு Boeing 737 ரக பயணிகள் விமானம் 195 பயணிகளை ஏற்றிக் கொண்டு கடந்த வருடம் அக்டோபர் மாதம் வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த துணை விமானிக்கு குறைந்த இரத்தம் அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் அப்படியே மயங்கியுள்ளார், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய பொறுப்பில் இருந்த விமானி, விமான பணிப்பெண்கள் உதவியை நாடினார்.

அவர்கள் விமானம் தரையிறங்கும் முக்கிய உதவியை விமானிக்கு செய்தனர்.

இதையடுத்து விமானம் பத்திரமாக ஸ்பெயினில் தரையிரக்கப்பட்டது. பின்னர் மயக்கத்திலிருந்த விமானியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

போன வருடம் நடந்த இந்த சம்பவத்தை ஜேர்மனியின் விமான விபத்து விசாரணை இயக்கம் தற்போது தான் வெளியிட்டுள்ளது.

விமான பணிப்பெண்களுக்கு சிறப்பு வெகுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்