Home / உலகம் / சுவிஸ் /

சிரிய சமாதானம் தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைகள் இனிதே நிறைவு

Posted On : April 1, 2017

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் சிரிய சமாதானம் தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவாரத்தைகள் இனிதே நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவுபெற்ற குறித்த பேச்சுவார்த்தைகள், சிரியாவில் ஆறு வருடங்களாக தொடரும் யுத்தத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது என்பது தொடர்பிலேயே நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த சிரியாவுக்கான ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஸ்டெபன் டி மிஸ்ரூரா (Staffan de Mistura), ”சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் முறைசாரா விதத்திலும் நடத்தப்பட்டன. குறித்த பேச்சுவார்த்தை சிரிய அரசாங்கத்துக்கும உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் இடையில் நடத்தப்பட்டன” என தெரிவித்தார்.

மேற்குறித்த கருத்தை அவர், நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் சிரிய யுத்தத்தின் காரணமாக இதுவரை 310,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Comments

தொடர்புடைய செய்திகள்