Home / சினிமா / திரைவிமர்சனம் /

விருத்தாசலம்

Posted On : April 1, 2017

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’.

இதில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராய நத்தம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். சிறந்த நிர்வாகத்துக்காக ஜனாதிபதி விருது பெற்றவர். கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, நெல்லை சிவா, டைரக்டர் நாராயணமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -சிவ நேசன், உமாசங்கர், இசை-ஸ்ரீராம், பாடல்கள்- இளையகம்பன், எடிட்டிங் -வி.டி.விஜயன் சுனில், கலை- நா.கருப் பையன்,நடனம்-சதீஷ் , ஸ்டண்ட்-பயர் கார்த்திக்,தயாரிப்பு பி.செந்தில்முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரத்தன்கணபதி. படம் பற்றி இயக்குனர் கூறும் போது….

“சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக, 14 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். இளமையை இழந்து வெளியே வரும் அவன் பெற்ற தாயையும், காதலியையும் இழக்க நேரிடுகிறது.

ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்க வில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை” என்றார்.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7-ந் தேதி வெளியாகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்