Home / உலகம் / சுவிஸ் /

சுவிட்சர்லாந்து அரசிடம் இந்தியாவின் கோரிக்கை

Posted On : April 4, 2017

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருப்போரின் விவரங்களை தருமாறு சுவிஸ் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கறுப்புப்பணத்தை பதுக்கியுள்ள 10 பேர் மற்றும் 2 டெக்ஸ்டைல் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட மற்ற நிறுவனங்களின் விவரங்களையும் தருமாறு மத்திய அரசு அவ்வங்கியினை அணுகியுள்ளது.

சுவிட்சர்லாந்து சட்டத்தின் படி முதலீட்டாளர்களின் விவரங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு முன் சம்பந்தபட்ட நபர் அல்லது நிறுவனங்களுக்கு கடைசி வாய்ப்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.

30 நாட்களுக்குள் விளக்கம் தராத நிறுவனங்களின் தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும், பின்னர் குறித்த அரசாங்கத்திடம் தெரிவிக்கப்படும்.

இதன்படி நியோ கார்ப்பரேசன் இண்டர்நேஷனல் மற்றும் எஸ்இஎல் போன்ற நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்