Home / உலகம் / அவுஸ்ரேலியா /

சிலந்தி கடித்ததால் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் தந்தை: மகள் உருக்கம்

Posted On : April 6, 2017

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் சிலந்தி கடித்ததால் கை, கால்களை இழந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த 65 வயதான Terry Pareja என்ற நபரே சிலந்தி கடித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் Terry Parejaவை சிலந்தி ஒன்று கடித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகு அடுத்த நகரத்தில் உள்ள மருத்துவரிடம் செல்ல Terry Pareja திட்டமிட்டிருந்த நிலையில் அதற்குள் நிலைமை மோசமாகியுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தந்தையான Terry Pareja, தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது நிலைமை மிக மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Terry Pareja உடலில் சதை அருந்தும் பூச்சி பரவினால் அவரது கைகளில் வெட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், Terry Parejaயின் மருத்துவ செலவுக்காக அவரது மகள் நிதி திரட்டி வருகிறார். இதுவரை, 30,000 பிரிட்டிஷ் பவுண்டு திரட்டியுள்ளார்.

இதுகுறித்து Terry Parejaயின் மகள் கூறியதாவது, நாங்கள் பணக்காரர்கள் இல்லை, மருத்துவ செலவுக்கான வசதி எங்களிடம் இல்லை. அதனால், எனது தந்தையின் சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என உங்களின் இதயங்களை தட்டி கேட்கிறேன் என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்