Home / சினிமா / ஹாலிவுட் /

கதாநாயகி உதட்டை முத்தத்தால் பதம் பார்த்த ‘எக்ஸ் மென்’!

Posted On : April 7, 2017
உலக அளவில் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படமான ‘எக்ஸ் மென்’ படங்களில் அனைத்து பாகங்களிலும் கதாநாயகனாக நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேன். ‘எக்ஸ் மென்’ பட வரிசையில் 10-வது பாகமான ‘லோகன்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘தி கிரேட்டஸ்ட் ஷோமேன்’ என்றப் படத்தில் அவர் நடித்து வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற சர்க்கஸ் நிறுவனமான ‘பார்நம் அண்ட் பெயிலி’ சர்க்கஸை தோற்றுவித்த பி.டி. பார்நம்மின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

மியூசிக்கல் டிராமா பாணியில் உருவாகும் இப் படத்தில் ஹக் ஜேக்மேன், பார்நம்மாக நடிக்கிறார். படத்தின் கதாநாயகியாக மிச்செல்லே வில்லயம்ஸ் நடிக்கிறார்.

இந்த நிலையில், இருவரும் மிகவும் உணர்ச்சிகரமாக முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட இந்த போட்டோ படத்துக்காக எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. இதனிடையே இந்தப் படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

1940-களின் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதால், அந்த காலகட்ட ஆடைகளை அணிந்தவாறு ஹக் ஜேக்மேனும், மிச்செல்லே வில்லயம்ஸும் புகைப்படத்தில் தோற்றம் அளிக்கின்றனர்.

தொடர்ந்து ஆக்‌ஷன் அதிரடி கேரக்டர்களில் நடித்து வந்த ஹக் ஜேக்மேன் இப்போது காதல், காமெடி கலந்த உணர்வு பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இது அவரது கனவு படம் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கூறி வருகிறார்.

Comments

தொடர்புடைய செய்திகள்