Home / உலகம் / அவுஸ்ரேலியா /

சிரிய விமானத்தளம் மீதான தாக்குதலை வரவேற்கிறார் அவுஸ்ரேலிய பிரதமர்

Posted On : April 7, 2017

சிரிய விமானத்தளம் மீதான அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களுக்கு அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது மல்க்கம் டர்ன்புல் தனது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அமெரிக்காவின் துரிதமான பதிலடிக்கு அவுஸ்ரேலிய அரசு பலமான ஆதரவை வெளிப்படுத்துகின்றது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் சம்பவம் அசாத் ஆட்சிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலில் அவுஸ்ரேலியா தொடர்புபடவில்லை. எனினும் ஈராக் மற்றும் சிரியாவில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் முழு உறுதிப்பாட்டுடன் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் பங்களிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற நச்சுவாயுத் தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழநதனர். மேலும் பலர் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர்.இந்த தாக்குதல் சிரிய அரசால் மேற்கொள்ளப்பட்டது என்றும் சர்வதேச நாடுகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிரிய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹோம்ஸ் மாகாணத்திலுள்ள சிரிய விமானத்தளத்தை இலக்கு அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது.

கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்