Home / சினிமா / ஹாலிவுட் /

திருமணநாளில் ரசிகர்களுக்கு பாடகி பியான்ஸ் தந்த ஸ்பெஷல் கிப்ட்!

Posted On : April 7, 2017
ஹாலிவுட் பாப் பாடகிகளுள் முன்னணி பாடகியாக திகழ்பவர் பியானஸ். பாடல்கள் பாடுவது மட்டுமில்லாமல் ஏராளமான மியூசிக் விடியோக்களையும் வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான தி பிங் பாண்தர், ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட சில படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப் படங்கள், விளம்பரப்படங்கள் ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணையத்தளம் உலகின் அழகான பெண்மணிகள் பட்டியலை வெளியட்டது. அதில், அவர் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். இதற்காக அந்த இணையத்தளத்துக்கும், தனக்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

பிரபல ராப் பாடகர் ஜே கார்டரை கடந்த 2008-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் பியானஸ். இதையடுத்து ஏப்ரல் 4-ஆம் தேதி பியான்ஸ் தனது 9-வது திருமண நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில், திருமண நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக புதிய பாடல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த மியூசிக் விடியோவில் தனது குடும்ப உறுப்பினர்களோடு வீட்டில் இருக்கும் பியானோ அருகே நின்றுகோடு பியான்ஸ் பாடுவது போன்று அமைந்துள்ளது.

தற்போது இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்