Home / உலகம் / ஜேர்மனி /

மனைவி கொல்லப்பட்டதால் கணவன் தற்கொலை: கொலையாளியை பிடிக்க பொலிஸ் தீவிரம்

Posted On : April 7, 2017

ஜேர்மனி நாட்டில் பெண் ஒருவரை கடத்தி கொலை செய்த மர்ம நபரை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜேர்மனியில் உள்ள Heidenheim நகரில் வங்கி உயர் அதிகாரி ஒருவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு கணவரை மிரட்டியுள்ளார்.

வேறு வழியின்றி கடத்தல்க்காரன் கூறிய இடத்தில் 3,00,000 யூரோ பணத்தை கணவர் ஒரு பெட்டியில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

ஆனால், கடைசி வரை அந்தப் பணம் எடுக்கப்படவில்லை. மாறாக, அவரது மனைவி ஒரு வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மனைவி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார்.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு நபர் ஒருவர் குடிபோதையில் ‘பெண்ணை கடத்தி கொலை செய்தது நான் தான்’ என சிலரிடம் கூறியுள்ளார்.

நபர் கூறியதை பதிவு செய்த அவர்கள் அந்த ஆடியோவை பொலிசாரிடம் கொடுத்துள்ளனர்.

கொலையாளி சிக்கிக்கொண்ட மகிழ்ச்சியில் அவரை கைது செய்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆனால், அந்நபர் குடிபோதையில் உலறியதாகவும், கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.

அதேபோல், பொலிசார் நடத்திய டி.என்.ஏ பரிசோதனையில் கைது செய்யப்பட்ட நபர் கொலையாளி இல்லை என நிரூபனம் ஆனதை தொடர்ந்து பொலிசார் அவரை நேற்று விடுதலை செய்துள்ளனர்.

கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் பொலிசார் சந்தேகத்திற்குரிய நபரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்