Home / உலகம் / ஜேர்மனி /

ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கு சற்றுமுன்னர் அமெரிக்கா அறிவித்தது: ஜேர்மனி

Posted On : April 8, 2017

சிரிய இராணுவ விமானத்தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கு சற்று முன்னர் அமெரிக்கா தமக்கு தகவல் வழங்கியதாக ஜேர்மனிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபன் செய்பேர்ட் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.

சிரிய இராணுவ விமானத்தளம் மீதான அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குல் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு ஜேர்மனிய அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக ஸ்டெஃபன் செய்பேர்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் தாக்குதல் நடத்துவதற்கு சற்றுமுன்னர் அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்