Home / உலகம் / நார்வே /

கப்பல் போக்குவரத்திற்கான முதலாவது சுரங்கப்பாதையை அமைக்க நோர்வே தீர்மானம்

Posted On : April 8, 2017

கப்பல் போக்குவரத்திற்கான உலகின் முதல் சுரங்கப்பாதையை அமைப்பதற்கு நோர்வே அரசு தீர்மானித்துள்ளது. நேர்வேஜியன் கடலை இணைக்கும் ஸ்டட்லான்டெற் தீபகற்பத்தின் கீழ் இந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நோர்வே போக்குவரத்து அமைச்சர் கேட்டில் சொல்விக் ஓல்சன் தெரிவிக்கையில், ‘ வடமேற்கு நோர்வேயில் அமைந்துள்ள ஸ்டட் என்று அழைக்கப்படும் ஸ்டட்லான்ட்டெற் தீபகற்பத்தில் கப்பல் சுரங்கப்பாதை அமைப்பது உறுதியாகியுள்ளது.

ஸ்டட்லான்ட்டெற் தீபகற்ப பகுதியின் நீரோட்டம் மற்றும் நீருக்கு அடியிலான தன்மைகளை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக சிக்கலான அலைநிலைகளை கருத்தில்கொண்டு சுரங்கப்பாதை அமைக்கப்படுகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் சுரங்கப்பாதையானது 30 மீற்றர் அகலமும் 49 மீற்றர் உயரமும் உடையதாக 1700 மீற்றர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

சுமார் 314 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சுரங்கப்பாதை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டளவில் பாவனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டுமானப்பணிகள் இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சுரங்கப்பாதை ஊடாக 16 ஆயிரம் தொன் எடைவரையிலான சரக்குக் கப்பல்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்