Home / உலகம் / சுவிஸ் /

பொலிஸ் வேடத்தில் மர்ம நபர்கள் கொள்ளை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Posted On : April 8, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் மர்ம நபர்கள் சிலர் பொலிஸ் வேடத்தில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸின் சூரிச் மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அதில், பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி சில மர்ம நபர்கள் வயதானவர்களை தொடர்புக்கொண்டுள்ளனர்.

பின்னர், அதிநவீன முறையில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதால் வங்கியில் இருந்து பணம் மற்றும் நகைகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவுரைக் கூறியுள்ளனர்.

மர்ம நபர்கள் கூறியதை உண்மை என எண்ணிய சிலர் அவர்கள் கூறிய இடத்திற்கு பணத்தை மாற்றிய பிறகு அவர்கள் போலியான பொலிசார் என தெரியவந்துள்ளது.

இத்தகவல் வெளியானதும் பொலிசார் உஷார் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘பணம் மற்றும் நகைகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு உண்மையான பொலிஸ் அதிகாரிகள் அறிவுரை கூறவில்லை.

இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்கள் ஜேர்மன் மொழியில் சரளமாக பேசியுள்ளனர்.

ஆனால், சூரிச் மாகாணத்தை சேர்ந்த பொலிசார் சுவிஸ் மொழியில் மட்டுமே சரளமாக பேசுவார்கள்.

மேலும், மர்ம நபர்கள் அனுப்பிய [email protected] என்ற மின்னஞ்சலும் போலியானது. இந்த மின்னஞ்சலுக்கு பொதுமக்கள் எவ்வித தகவல்களை அளிக்க வேண்டாம்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் பொலிசார் எனக் கூறிக்கொண்டு அனுகினால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்