Home / உலகம் / ஜேர்மனி /

தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட ஜேர்மனி பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்

Posted On : April 10, 2017

தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட ஜேர்மனி பெண்ணுக்கு வழக்கு தொடர்பான தகவலை பொலிசார் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துக்கு ஜேர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (35) என்னும் பெண் சுற்றுலா வந்தார்.

அப்போது அங்குள்ள கடற்கரையில் ஜெசீனா தனியாக இருந்த போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அருகிலிருந்த சவுக்கு தோப்புக்கு அவரை தூக்கி சென்று கற்பழித்தனர்.

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைக்காமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது வாரணாசியில் தங்கிருக்கும் ஜெசீனாவுக்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 200–க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் படத்தை பொலிசார் வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள்.

அந்த படங்களை பார்த்த ஜெசீனா இதில் இருப்பவர்கள் யாரும் அந்த நபர்கள் இல்லை என கூறி விட்டார்.

இது போல தினமும் பொலிசார் தங்களுக்கு கிடைத்த தகவல்களை அவருக்கு அனுப்புகிறார்கள்.

மேலும், குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Comments

தொடர்புடைய செய்திகள்