Home / உலகம் / ஜேர்மனி /

பொலிஸ் அதிகாரியை அதிர வைத்த 5 வயது சிறுவன்: நடந்தது என்ன?

Posted On : April 10, 2017

ஜேர்மனி நாட்டில் 5 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை வண்டியை பெட்ரோல் நிரப்ப வீட்டை விட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பவேரியா மாகாணத்தில் உள்ள Ingolstadt என்ற நகரில் 5 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறான்.

மகன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்த பெற்றோர் அண்மையில் பெட்ரோலில் இயங்கும் பொம்மை ட்ராக்டரை வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் சிறுவன் ட்ராக்டரை ஓட்டிச் சென்றுள்ளான்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளார்.

அப்போது, ‘வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. பெட்ரோல் நிலையத்திற்கு அவசரமாக சென்றுக்கொண்டு இருக்கிறேன்’ என பதிலளித்துள்ளான்.

சிறுவனின் பதிலளால் மேலும் அதிர்ச்சி அடைந்த பொலிசார் சிறுவனி வீட்டு முகவரியை சேகரித்துக்கொண்டு சிறுவனை அழைத்துச்சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்ற பிறகு தான் தன்னுடைய மகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான் என்பதை தாயார் அறிந்துள்ளார்.

மேலும், வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக சிறுவன் எட்டிக் குதித்து வெளியேறியதும் தெரியவந்தது.

சிறுவனை ஜாக்கிரதையாக கண்காணிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறிய பொலிசார் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்