Home / சினிமா / ஹாலிவுட் /

இணையத்தில் வைரலாகும் முன்னாள் சூப்பர்மாடலின் டாப்லெஸ் புகைப்படம்!

Posted On : April 11, 2017

ஹாலிவுட் நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலமாக திகழ்பவர் சிண்டி கிராபோர்டு. ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் தோன்றிய இவர், ஏராளமான மியூசிக் விடியோக்கள், பிட்னஸ் விடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.

ரிச்சர் கெர் என்பவரை 1991-இல் திருமணம் செய்து கொண்ட இவர், அவரை 1995-இல் விவாகரத்து செய்தார். இதைத் தொடர்ந்து 1998-இல் ராண்ட் கெர்பேர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், தனது கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி வரும் அவர், அப்போது எடுத்துக் கொண்ட அரைநிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஃபார் எவெர் டெனிம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நீல நிற ஜீன்ஸ் அணிந்து கொண்டு, மேலாடை எதுவும் அணியாமல் பீச்சில் குப்புற படுத்தவாறு மிக ரிலாக்சாக இருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தற்போது 51 வயது ஆகும் சிண்டி, மாடலிங் ஈடுபடுவது , திரைப்படங்கள் நடிப்பது போன்றவற்றை குறைத்துக் கொண்டார். எனினும்  இந்த வயதிலும் அவரது கவர்ச்சியும், இளைமையும் சுண்டி இழுப்பதாக அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்