Home / உலகம் / நார்வே /

நோர்வேயிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு: புலனாய்வு சேவைகள்

Posted On : April 11, 2017

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் (Oslo)  வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டமை தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதையே உணர்த்துகின்றது என புலனாய்வு சேவைகள் தெரிவித்துள்ளன.

நோர்வேயில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது புலனாகியுள்ளதால் இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குண்டு பொதுமக்களின் நடமாட்டம் இல்லாத பகுதியொன்றில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 17 வயது மதிக்கத்தக்க ரஷ்ய பிரஜை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வழக்கறிஞர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, கைது செய்யப்பட்டவர் அவரது நண்பனை குறும்பு செய்யும் வகையிலேயே குறித்த குண்டை உபயோகித்துள்ளார் எனவும் அதன் பின்னணியில் வேறு எதுவித நோக்கங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்