Home / உலகம் / ஐரோப்பா /

அமெரிக்கா சிரியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தாது: செர்கெய் லவ்ரோவ்

Posted On : April 15, 2017

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது என அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சிரிய வெளியுறவு அமைச்சருடன் மொஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்காவால் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஓர் கோபமூட்டும் செயலாகவே அமைந்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இது போன்ற தாக்குதல்கள் இனிமேலும் நடத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்” என தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்