Home / உலகம் / ஐரோப்பா /

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த இத்தாலியில் புதிய சட்டமூலம்

Posted On : April 15, 2017

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் புதிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் படி, குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகலிடம் கோருவோர் தொடர்பாக விநியோகிக்கப்படும் விண்ணப்பங்கள் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு சுமார் 250 தொழில்சார் நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்குறித்த புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் குடியேற்றவாசி ஒருவர்,  அடுத்த மாதமே மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்தியதரைக்கடல் ஊடாக இத்தாலியை வந்தடைந்த குடியேற்றவாசிகளின் மொத்த எண்ணிக்கை 181,000 என தெரிவித்துள்ளது.

இது போன்ற அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக இத்தாலியின் சமூக பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்