Home / உலகம் / ஐரோப்பா /

துருக்கியில் நாளை கருத்துக்கணிப்பு

Posted On : April 15, 2017

துருக்கியின் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என்பதை நிர்ணயிக்கும் கருத்துக்கணிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பு தொடர்பில் மக்கள் பல்வேறு விதமான மனநிலைகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையீப் எர்டோகனுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள குறித்த கருத்துக்கணிப்பு துருக்கியின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வரும் என எர்டோகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “துருக்கியின் வரலாற்றில் எண்ணற்ற பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சி முறைமையே காரணம். அபிவிருத்தியடைந்த நாடுகள் பல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையே  கொண்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

எனினும், எர்டோகனுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என தெரிவிக்கும் பொதுமக்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, “2002 ஆம் ஆண்டிலிருந்து நாம் பார்ப்போமேயானால் எமது நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக பொருளாதாரம் மேன்மேலும் பின்தங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்கணிப்பு நாளை உள்ளூர் நேரப்படி அதிகாலை 05.00 மணியளவில் ஆரம்பித்து மதியம் 02.00 மணியளவில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 51.5 சதவீதமானோர் தையீப் எர்டோகனுக்கு சாதகமாகவே வாக்களிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்