Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அவுஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டுவர்களுக்கு நெருக்கடி! விசா முறையில் மாற்றம்

Posted On : April 19, 2017

அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த முறைக்கு பதிலாக தற்காலிக விசா முறை ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆற்றிய விசேட உரையின் மூலம் இந்த தகவலை வெளியிட்டார்.

அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையில் அந்த நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

எனினும் அதனை தடுத்து அவுஸ்திரேலியர்களுக்கு அதிகமாக தொழில் வழங்குவதற்கான காலம் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவை அனுபவம், ஆங்கில புலமை மற்றும் தொழிலாளர் சந்தை நிலைமைக்கமைய விசேட தற்காலிக விசா முறையின் ஊடாக அந்த நாட்டிற்கு செல்பவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்