Home / சினிமா / ஹாலிவுட் /

இந்த இடம் என்றாலே பிரியங்கா ரொம்ப செக்ஸி லேடியாக மாறி இருப்பாராம்!

Posted On : April 22, 2017
ஹாலிவுட் டிவி தொடரில் நடிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்ற பிரியங்கா, அங்குள்ள ரசிகர்களை தனது அழகாலும், நடிப்பாலும் கட்டி போட்டுவிட்டார். ரசிகர்கள் விரும்பும் நாயகி என்ற விருதை வென்ற. தொடர்ந்து பல கெளரவங்களையும், விருதுகளையும் குவித்து வரும் அவர் தற்போது மற்றொரு கெளரவத்தைப் பெற்று இருக்கிறார்.

ஹாலிவுட்டில் அறிமுகமான குவாண்டிகோ டிவி தொடர் சூப்பர் ஹிட்டாக தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் கலக்கி வருகிறார் பிரியங்கா. இடையே பேவாட்ச் என்ற படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படம் வரும் மே மாதம் ரிலீசாகிறது.

இதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபில் படத்திலும் டாம் க்ரூஸுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச நடிகையாக மாறியிருக்கும் பிரியங்கா தற்போது செக்ஸியஸ்ட் ரெட் கார்பட் லுக் பெண்மணியாக தேர்வாகி இருக்கிறார்.

பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தி செய்யும் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனம் ‘வாட் இஸ் செக்ஸி’ என்ற தலைப்பில் பலவேறு பிரிவுகளில் உலகில் செக்ஸியான பிரபல மாடல்கள், நடிகைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் செக்சியஸ்ட் ரெட் கார்பெட் லுக் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

புகழ் பெற்ற விருது நிகழ்ச்சிகளில் நடக்கும் சிவப்பு கம்பள (ரெட் கார்ப்பெட்) வரவேற்பில் மிகவும் செக்ஸியான லுக்கில் தோன்றுவதால் அவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

செக்ஸியஸ்ட் எண்டர்டெயினராக டெய்லர் சிஃப்ட், செக்ஸியான நடிகையாக மாண்டி மோர், ஃபார்எவர் செக்ஸி பெண்மணியாக மார்கட் ராப்பி, செக்ஸியஸ்ட் பாடகியாக லேடி காகா ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பிடித்துள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்