Home / சினிமா / ஹாலிவுட் /

‘காளி’ படத்தால் ஹாலிவுட் பாடகிக்கு வந்த சோதனை!

Posted On : April 22, 2017
ஹாலிவுட்டில் புகழ் பெற்ற  பாடகியாகவும், நடிகையாகவும் திகழ்பவர் கேட்டி பெர்ரி. இவருக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியக் கடவுளான காளியின் படத்தை ஷேர் செய்து தனது மனநிலை (கரண்டு மூட்) தற்போது இப்படி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் காளியின் படத்தை கேட்டி ஷேர் செய்திருப்பது கண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது ஒரு புறம் இருக்க, ஏராளமான ரசிகர்கள் அவரது மனநிலை சித்தரிக்கும் விதமாக காளி படத்தை தவறாக உபயோகப்படுத்தியதாகக் கூறி காய்ச்சி எடுத்தும் உள்ளனர்.

இந்திய ரசிகர் ஒருவர் கேட்டியின் பதிவுக்கு, இது எங்களின் கடவுள். எப்படி உங்களது மனநிலையோடு இதை ஒப்பிடலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மற்றொரு ரசிகர், கேட்டி தான் பதிவிட்டிருக்கும் காளி படத்துக்குப் பின்னால் இருக்கும் கதை பற்றி அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரது இந்த செயலை ஆதரிப்பவர்களை கண்டு வெட்கப்படுகிறேன் என்றும், எங்களது கடவுளை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள் பெர்ரி என்று இன்னொருவரும் காராசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்