Home / உலகம் / சுவிஸ் /

சுவிட்சர்லாந்தில் குளிர் கால நிறைவு விழா கோலாகல கொண்டாட்டம்

Posted On : April 24, 2017

சுவிட்சர்லாந்தின் Zurich நகரில் குளிர்காலம் முடிந்துள்ளதை கோலாகலமான திருவிழாவாக மக்கள் கொண்டாடினார்கள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள மிக பெரிய நகரான Zurichல் கடந்த 600 வருடங்களாக குளிர்கால நிறைவு விழா வெகு விமரிசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குளிர்கால திருவிழா என்பது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்குவதை குறிக்கும்.

நேற்று நடைபெற்ற திருவிழாவில் சிறுவர்கள், சிறுமிகள் பழங்காலத்தில் பிரபலமாக இருந்த உடையணிந்து சாலையில் தங்கள் பெற்றோருடன் அசத்தலாக வலம் வந்தார்கள்.

மேலும் குதிரையிலும் சிறுவர், சிறுமிகள் சந்தோஷமாக பயணம் செய்தார்கள்.

சிறுவர்கள் சாலையில் ஒய்யாரமாக வந்ததை இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் நின்று ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்