Home / சினிமா / ஹாலிவுட் /

சூப்பர்ஹீரோ படமான ‘டெட்பூல் 2’ ஷுட்டிங், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted On : April 25, 2017
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற மார்வெல் காமிக் புத்தகத்தில் இடம்பெறும் பிரதான கேரக்டர்களில் ஒன்றான ‘டெட்பூல்’ என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் சூப்பர்ஹீரோ ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதுடன், வசூலிலும் பட்டையைக் கிளப்பியது.

 இந்த நிலையில், ‘டெட்பூல்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘டெட்பூல் 2’ உருவாக உள்ளது. முதல் பாகத்தில் டெட்பூலாக நடித்த ரயான் ரெய்நால்ட்ஸ் இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் பாகத்தை ஜான் விக் இயக்குகிறார்.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து படத்தை அடுத்த ஆண்டு ஜுன் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே போல் 2018-ஆம் ஆண்டில் மார்வெல் புத்தக கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘எக்ஸ் மென் ஸ்பின்ஃஆப்ஸ் – தி நியூ மியூடன்ட்ஸ்’ ஏப்ரல் 13-லும், ‘டார்க் பீனிக்ஸ்’ நவம்பர் 2-ஆம் தேதியும் வெளியாக உள்ளன.

இதைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் மார்வெல் கதாபாத்திரங்களைச் சேர்ந்த 3 படங்கள் வெளியாக உள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்