Home / சினிமா / ஹாலிவுட் /

ஜோலியின் ரகசிய காதலனாக மாறிய பிரபல தொழில் அதிபர்!

Posted On : April 25, 2017
ஹாலிவுட் திரையுலகில் ஹாட் நட்சத்திர ஜோடிகளாகத் நடிகர் பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் திகழ்ந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பிரிந்தனர். விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிராட் பிட், ஏஞ்சலினா ஆகியோர் தற்போது தாங்கள் நடித்து வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் 6 குழந்தைகள் இருவரும் சேர்ந்தே கவனித்து வருகின்றனர்.

இதனிடையே ஜோலி தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவருடன் ரகசிய உறவில் ஈடுபட்டு வருவதாக  ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த நபர் யார் என்ற விவரம் வெளிவரவில்லை. ஆனால் அவர் தொழில் அதிபராக மட்டுமில்லாமல் மிகவும் வலுவான அரசியல் பின்னணியிலும் இருக்கிறாராம்.

ஜோலி அவ்வப்போது அவருடன் இணைந்து கலிபோர்னியா மாகணத்தில், மாலிபூ எஸ்டேட்டிலுள்ள வீட்டில் நேரத்தை செலவிடுகிறாராம். இந்த வீட்டிலேயே இருவரும் இரவு உணவு, விருந்து என நேரத்தை கழித்து வருகின்றனராம்.

கடந்த ஆண்டு லண்டன் சென்றபோது இந்தத் தொழில் அதிபருடன் ஜோலிக்கு பழக்கம் ஏற்பட்டது எனவும், அப்போது முதல் இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து மிகவும் ரொமாண்டிக்காக நேரத்தை செலவிட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து வெளியே தெரியாதவாறு ஜோலி மிகவும் ரகசியம் காத்து வருகிறாராம்.

Comments

தொடர்புடைய செய்திகள்