இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை : நாளை முக்கிய வாக்கெடுப்பு
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானம் நாளை பிரசல்ஸில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தி ஐரேப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரிகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே நாளைய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்தநிலையில் இலங்கை சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் என்று பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.