Home / சினிமா / ஹாலிவுட் /

உஷாரய்யா…உஷாரு…கேமரா ஓடுது உஷாரு! ‘அவதார்’ நடிகையின் எச்சரிக்கை!

Posted On : April 26, 2017
ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான தி டெர்மினல், வேண்டேஜ் பாயிண்ட், அவதார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜோ சால்டானா.

தற்போது இவரது புதிய படமான ‘கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி வால்யும் 2’ படம் டோக்கியோவில் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் வரும் மே 5-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து ஜோ சால்டானா கூறியதாவது:

கேமரா ஆன் செய்யாமல் இருந்தால் நான் இயல்பாகவும், மிகவும் வசதியாகவும் இருப்பது போல் உணர்கிறேன். ஆனால் அதை ஆன் செய்துவிட்டால் மிகவும் பாதுகாப்பு இன்மையாகவும், சுய விழிப்புடனும் இருக்கிறேன்.

இது சற்று அதிகம்தான். ஆனாலும் படங்களில்  நான் மிகவும் குறும்புத்தனமாக, நகைச்சுவை அளிக்கும்விதமாக தோன்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உஷார் நடவடிக்கை எனக்குள் ஏற்படுகிறது என நினைக்கிறேன்.

பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்துள்ள எனக்கு, நகைச்சுவை கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று  நீண்ட நாள்  ஆசை உள்ளது என்று கூறினார்.

‘கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி வால்யும் 2’ அமெரிக்காவில் வெளியாகும் அதே மே 5-ஆம் தேதி இந்தியாவிலும் வெளியாகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்