Home / சினிமா / திரைவிமர்சனம் /

பாகுபலி 2 திரை விமர்சனம்: அமெரிக்காவில் இருந்து!

Posted On : April 27, 2017
இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான ‘பாகுபலி 2’ திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை பற்றிய திரை விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என தன்னை கூறிக்கொள்ளும் உமைர் சந்து என்பவர் பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்ததாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அத்துடன் பாகுபலி படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தையும் இணைத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, திரைப்படம் தயாரிப்பது சுலபமான ஒன்று அல்ல. இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமாக படம் தயாரிக்க மிகப்பெரிய அளவில் பணம் செலவாகும் என்பதால் அது சவாலான ஒன்றாகும்.
சிஜிஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படம் ஹாலிவுட் சிறந்த படமான லார்ட் ஆஃப் த ரிங்ஸ் சீரிஸ் மற்றும் ஹாரி பாட்டர் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு நிகராக உள்ளது. கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் அப்படியே தத்ரூபமாக உண்மைத்தன்மையாக உள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்