Home / உலகம் / சுவிஸ் /

ரொனால்டோ, கிம்கர்தாஷியானை ஊதி தள்ளிய சுவிஸ் பெண்

Posted On : April 27, 2017

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிம் கர்தாஷியான் போன்ற புகழ்பெற்ற 10 போட்டியாளர்களுடனான சிறந்த Instragram படத்திற்கான போட்டியில் சுவிஸ் பெண் வெற்றிப்பெற்று விருது வென்றுள்ளார்.

Valais மாகாணத்தை சேர்ந்த Tiziana Vergari என்ற பெண்ணே இந்த ஆண்டின் சிறந்த Instragram புகைப்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.

ஆண்டின் சிறந்த Instragram படத்திற்கான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிம் கர்தாஷியான், Tiziana Vergari உட்பட 11 போட்டியாளர்களின் படங்கள் வாக்காளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

இதில், Tiziana Vergari எடுத்த படம் அதிக பயனர்களின் வாக்குகளை பெற்று சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, Tiziana Vergari விருது வழங்கப்பட்டுள்ளது.

Tiziana Vergari, ஆடை மாற்றும் அறையில் உட்கார்ந்திருந்த தனது இரண்டு மகள்களை புகைப்படம் எடுத்துள்ளார். கண்ணாடியின் மூலம் பல பெண்களும் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பது போல தெரிகிறது.

இதுகுறித்து Tiziana Vergari கூறியதாவது, Instagramல் அதிக பின்பற்றுபவர்கள் கொண்ட பத்து நட்சத்திரங்களுடன் பரிந்துரைக்கப்பட் நான் வெற்றிப்பெறுவேன் என்று நினைக்கவில்லை. எல்லாம் சாத்தியம் என்பதற்கு இது ஒரு சான்று என Tiziana Vergari நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்