Home / உலகம் / ஐரோப்பா /

ஐரோப்பாவிற்கு சட்டவிரோத பயணம் மேற்கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு

Posted On : April 28, 2017

ஐரோப்பாவிற்கு படகு மூலம் சட்டவிரோத பயணம் மேற்கொண்டிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் வைத்து ஒரே தினத்தில் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் புகலிடம் கோரும் அகதிகளுடன் பாதுகாப்பற்ற வகையில் இறப்பர் படகுகளில் சட்டவிரோதமாக பயணித்திருந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள் என மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச அமைப்பின் தகவல்களின் பிரகாரம், இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 32 ஆயிரம் பேர் ஐரோப்பாவை சென்றடைந்துள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத பயணத்தின்போது சுமார் 650இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்