Home / சினிமா / ஹாலிவுட் /

நார்னியா புதிய பாகத்தை இயக்கும் ஜுராசிக் பார்க் இயக்குநர்!

Posted On : April 28, 2017
ஹாலிவுட் பேண்டஸி படங்களில் மனிதர்கள், விலங்கள் இணைந்து நடித்து ரசிகர்களை பெரிதளவில் கவந்த படம் ‘நார்னியா’.

2005-இல் ‘குரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: தி லயன், தி விட்ச் அண்ட் தி வார்டோர்ப்’ என்ற பெயரில் முதல் பாகம் வெளியானது. இதன் பின்னர் 2008-இல் ‘குரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: பிரன்ஸ் கேஸ்பியன்’, 2010-இல் ‘குரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: தி வேயாஜ் ஆஃப் தி டாவ்ன் டிரீடர்’ என இது வரை இப் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

இந்த மூன்று பாகங்களும் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டாகி, வசூலிலும் பட்டையைக் கிளப்பியது.

இந்த நிலையில், நார்னியாவின் நான்காம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாகத்துக்கு குரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: தி சில்வர் சேர் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்தை ஜுமான்ஜி, கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவென்ஜர், ஜுராசிக் பார்க் 3 உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜே ஜான்ஸ்டன் இயக்க உள்ளார். படத்துக்கு திரைக்கதையை டேவிட் மேக்கி எழுதுகிறார்.

டிரைஸ்டார் பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்