Home / உலகம் / ஐரோப்பா /

பிரெக்சிற் பேச்சுவார்த்தை இருதரப்பிற்கும் சவால் மிகுந்தது: ஜேர்மன் அதிபர்

Posted On : April 28, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் பேச்சுவார்த்தையானது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் என இரு தரப்பிற்கும் சவால் மிக்கதாகும் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ஜேர்மன் அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரெக்சிற் பேச்சுவார்த்தையானது இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே பாரிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஜூன் 8ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கு பின்னர் முறையாக இடம்பெறும் என்ற கருத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளோட் ஜங்கருடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்