Home / சினிமா / ஹாலிவுட் /

டிவி ஷோவில் கதறி அழுத கிம் கர்தாஷியன்! ஏன் தெரியுமா?

Posted On : April 29, 2017
ஹாலிவுட் கவர்ச்சி மாடலும், தொலைக்காட்சி பிரபலமுமாகத் திகழும் கிம் கர்தாஷியன் அடிக்கடி தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருவதை வழக்கமாகக் கடைபிடித்து வருகிறார்.

இது தவிர எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாலும் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்து அளிப்பார்.

ஆனால் சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும், கவர்ச்சிப் படங்கள் பதிவிடுவதையும் குறைத்துக் கொண்டுள்ளார். இவரது இந்த மாற்றத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாரீஸில் இவரிடம் கொள்ளையர்களால் நடத்தப்பட்ட வழிப்பறி சம்பவமே காரணம் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதை உறுதிபடுத்தும் விதமாக கிம்மிடம் அந்த சம்பவம் குறித்து யாரெனும் கேட்டால் உணர்ச்சிவசப்படுவதுடன், கொஞ்சம் பதட்டமும் அடைகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் பிரபலமான தி எல்லென் டீஜென்ரிஸ் ஷோவில் கலந்து கொண்டார் கிம். அதில், தொகுப்பாளரான எல்லென், கிம்மிடம் பாரீஸ் சம்பவம் குறித்து கேட்டார்.

அந்த பைத்தியகாரத்தானமான சம்பவம் எனக்கு நடக்க வேண்டும் என்று இருந்தது.எல்லாம் விதி. நான் அதைப் பற்றி பேசும்போது அழ வேண்டாம் என நினைக்கிறேன். ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.  இதற்கு மேலும் அழுவதற்கு தயாராக இல்லை.

நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் எதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. அப்படித்தான் அந்த சம்பவமும் என்று கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்